05.ஜீன்.2018 செவ்வாய்க்கிழமை அன்று யாழப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் பெயர்கொண்ட தினம் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாண மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்திரு பெனற் தலைமையில் இந்நிகழ்வுகள்கள் சிறப்பாக நடைபெற்றது. புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க பாடசாலையிலிருந்து ஆயர் அவர்கள் வான்ட் வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டு காலை 9.00 மணியளவில் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய் வலயங்களைச் சேர்ந்த பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.
திருப்பலியின் முடிவில் 2017ம் ஆண்டு நடைபெற்ற தரம் 03 இல் இருந்து தரம் 11 வரையான கத்தோலிக்க திருமறைத்தேர்வில் வகுப்பு ரீதியாக முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கும்இதிருவிவிலிய அறிவுத் தேர்வு, பேச்சுப் போட்டிகளில் (2017, 2018) முதல்; இரண்டு இடங்களைப் பெற்றவர்களுக்குமான பரிசில்கள் ஆயர்அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் சமூக அபிவிருத்தி நிலையத்திற்கான அடிக்கல்லை மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் நாட்டிவைத்தார்.