பிப்.17. தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் ஆய்வுமையம் நடாத்திய தனிநாயகம் அடிகளாரின் நினைவுப் பேருரை நிகழ்வு இன்று சனிக்கிழமை (17.02.2018) காலை 10.15 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பாதுகாவலன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் “தனிநாயகம் அடிகளாரின் தமிழர் ஆன்மீகம்” என்ற தலைப்பில் இந்தியாவிலிருந்து வருகைதந்த அருட்கலாநிதி அமுதன் அடிகளார் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், ‘தனிநாயகம் அடிகளார் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தமிழ் மொழியைப் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு தமிழரின் இருப்பையும், அதன் தொன்மையையும் உலகிற்கு எடுத்துக்காட்டி அவற்றிற்கு மதிப்பளித்து வளர்த்ததன் மூலம் தமிழரின் ஆன்மீகத்தை உலகறிய வைத்தார்’ என்பதை சுட்டிக்காட்டினார். இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக அருட்கலாநிதி S.J. இம்மானுவேல் அடிகளாரும், சிறப்பு விருந்தினர்களாக அருட்கலாநிதி அமுதன் அடிகளாரும், மூத்த ஊடகவியலாளர் திரு. இராயன் பிலிப் அவர்களும். அவைத்தலைவராக திரு. அன்ரன் பிலிப் சின்னராசா அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் அருட்கலாநிதி S.J. இம்மானுவேல் அடிகளாரும், அருட்கலாநிதி அமுதன் அடிகளாரும் பொன்னாடைகள் அணிவித்து கெளரவிக்கபட்டர்கள். இந்நிகல்வின் இறுதியில் புத்தகக் கண்காட்சியும் தனிநாயகம் அடிகளாரின் தமிழ் மொழி சார்ந்த புத்தகத் தொகுப்பும் விற்பனையும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், குருக்கள், துறவிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் பங்குபற்றினர். இந்நிகழ்வு அருட்பணி ஜெயசேகரம் அடிகளாரின் நெறிப்படுத்துதலில் சிறப்பாக நடைபெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.