திருத்தந்தையின் அடக்கச் சடங்கு நிறைவுற்று சில நாட்களுக்குப்பின் உலகின் 80 வயதிற்குட்பட்ட கர்தினால்கள் வத்திக்கானில் கூடி அடுத்த திருத்தந்தையை தேர்ந்தேடுக்கும் வாக்களிப்பில் கலந்துகொள்வார்களென வத்திக்கான் செய்திகள் தெரிவித்துள்ளன.

திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட கர்தினால்கள் பங்கேற்க முடியாதென்பது திருஅவை விதியாக அமைந்துள்ளமையால் தற்போது திருஅவையில் 252 கர்தினால்கள் இருக்கின்றபோதிலும், அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதிற்குட்பட்ட கர்தினால்கள் 135 பேர் திருஅவையில் உள்ளனரெனவும் இவர்களில் 117 பேர் 80 வயதிற்கும் மேற்பட்டவர்களெனவும் இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டவர்களுள் 148 பேர் தற்போது உள்ளனரெனவும் இதில் 108 பேர் 80 வயதிற்குட்பட்டவர்களாக இருப்பதுடன் திருத்தந்தை 16ஆம் பெனடிட் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டு, தற்போது உயிரோடு இருக்கும் 62 பேரில் 22 பேரே 80 வயதிற்குட்பட்டவர்களெனவும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த புனித திருத்தந்தை இரண்டாம் ஜோன் போல் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டு தற்போது உயிரோடு இருக்கும் 41 கர்தினால்களுள் 5 பேரே 80 வயதிற்குட்பட்டவர்களெனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin