மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இரங்கல் திருப்பலி 25ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் திருகோணமலை புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலியின் ஆரம்பத்தில் இறைமக்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் திருத்தந்தையின் கொடிகள், மலர் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏந்திய வண்ணம் ஆலயத்திற்குள் வருகைதந்து திருத்தந்தைக்கான அஞ்சலி செலுத்தினர்.

இத்திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து திருத்தந்தையின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபித்தனர்.

By admin