மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவாக யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது.
துறைத்தலைவர் அருட்தந்தை போல் றொகான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருத்தந்தையின் உருவப்படத்திற்கு சுடரேற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வும் உரைகளும் இடம்பெற்றன.
அஞ்சலி உரைகளில் கனடா ரொறன்ரோ பல்கலைக்கழக விரிவுரையாளர் அருட்தந்தை சந்திரகாந்தன் அவர்களும் கலந்து இணையவழி உரையினை வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், அங்கிலிக்கன் சபைக் குருமுதல்வர் திருவருட்பணியாளர் பரிமளச்செல்வன், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா, பல்கல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் திரு. றகுராம், பல்கல்கலைக்கழக இந்துக்கற்கைகள் பீட பீடாதிபதி பத்மநாப ஜயா, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.