உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வு கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறுவர்கள், இளையோர் மற்றும் திருமணமானவர்களுக்கான விளையாட்டுக்களுடன் நீண்டகாலமாக நடைபெற்றுவரும் இளையோர் மற்றும் திருமணமானவர்களுக்கிடையிலான துடுப்பாட்ட போட்டியும் பரிசளிப்பும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பங்குமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.