உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 23ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
கலாசாலை அதிபர் திரு. சந்திரமௌலீசன் லலீசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விஞ்ஞானநெறி ஆசிரிய மாணவி திருமதி. பெலினி சசிகுமார் அவர்களால் உயிர்த்த ஞாயிறு உரை வழங்கப்பட்டதுடன் தொடர்ந்து இயேசுவின் திருப்பாடுகளின் காணொளியும் காட்சிப்படுத்தப்பட்டது.