திருகோணமலை மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தவக்கால தியானம் கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி மொண்டோபானோ தியான இல்லத்தில் நடைபெற்றது.
ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை தியானம், நற்கருணை வழிபாடு, தியான உரைகள், திருப்பலி என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த 125 இளையோர் பங்குபற்றியிருந்தனர்.