மன்னார் மறைமாவட்ட காத்தான்குளம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை மாணவர்களுக்கான நிரந்தர அங்கத்தவர் சின்னம் சூட்டும் நிகழ்வு கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காத்தான்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை செல்வநாதன் பீரிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 05ஆம் திகதி சனிக்கிழமை சின்னங்களை பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கான பயிற்சி பட்டறையும் 06ஆம் திகதி திருப்பலியும் தொடர்ந்து பிள்ளைகளுக்கான சின்னம்சூட்டும் நிகழ்வும் இடம்பெற்றன.

மறைமாவட்ட பாப்பிறையின் சபைகளின் இயக்குனர் அருட்தந்தை தயாளன் கூஞ்ஞ அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன் 58 சிறார்கள் நிரந்தர உறுப்பினருக்கான சின்னங்களையும் பெற்றுக்கொண்டனர்.

By admin