யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி மொன்பேர்ட் சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி கடந்த 10ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் மரியபிரகாசம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் விளையாட்டுக்களும் பரிசளிப்பும் இடம்பெற்றதுடன் சிறப்பு நிகழ்வாக “கல்வியின் சக்தி” என்னும் நாடகமும் சிறார்களால் மேடையேற்றப்பட்டது.
தீவகம் தெற்கு பிரதேச செயலர் திரு. கைலாசபிள்ளை சிவகரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் ஊர்காவற்துறை பொலிஸ் தலைமையக தலைமை ஆய்வாளர் திரு. விதானபஹிரன அவர்கள் கௌரவ விருந்தினராகவும், வேலனை பிரதேச சபை செயலாளர் திரு. தியாக சந்திரன் மற்றும் தவஹிரிஸ் அறக்கட்டளை நிறுவுனர் திரு. தவவிநாயகம் சந்திரகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டனர்.