கரவெட்டி புனித அந்தோனியார் ஆலய வளாகத்திலுள்ள புனித வியாகுல அன்னை கெபி திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 11ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்ததுடன் திருவிழா அன்று காலை நற்கருணை வழிபாடு, ஒப்புரவு அருளடையாளம் என்பனவும் மாலை திருச்சிலுவைப்பாதையும் தொடர்ந்து திருவிழா திருப்பலியும் இடம்பெற்றன.

திருவிழா திருப்பலியை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி உப அதிபர் அருட்தந்தை மகன் அலோசியஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin