திருகோணமலை மறைமாவட்ட இறைமக்கள் இணைந்து முன்னெடுத்த திருச்சிலுவைப்பாதை தியானம் 05ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நாச்சிக்குடா சிலுவை மலையில் நடைபெற்றது.
எதிர்நோக்கின் திருப்பயணிகளாக என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இத்தியானத்தில் சிலுவைப்பாதையும் தொடர்ந்து திருப்பலியும் நடைபெற்றன.
திருப்பலியை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார.
இத்தியானத்தில் 2000ற்கும் அதிகமான இறைமக்கள் பங்குபற்றியிருந்தனர்.