யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க மருத்துவர் அமைப்பினருக்கான தவக்காலத் தியானம் கடந்த 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தியான உரை, நற்கருணை வழிபாடு, திருப்பலி, ஒப்புரவு அருட்சாதனம் என்பன இடம்பெற்றன.
தியான உரையை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஸ்ரனி அன்ரனி அவர்கள் வழங்கியதுடன் திருப்பலியை திருவுள பணியாளர் சபை அருட்தந்தை பிறாங் டவ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் மருத்துவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், மருத்துவ பீட மாணவர்களென பலரும் பங்குபற்றியிருந்தனர்.