இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட கலைத்தூது மரியசேவியர் அடிகளார் முத்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட முத்தமிழ் விழா கடந்த 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் ஆக்கங்களைத் தாங்கிய கலைக்கதிர் இதழ் வெளியீடும் தமிழ்தின போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கலை நிகழ்வுகளில் தமிழ்மொழி வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பது கலையா சமயமா என்னும் தலைப்பில் பட்டிமன்றம், குடத்கூத்து, பேச்சு, கிராமிய பாடல் என்பவற்றுடன் சிறப்பு நிகழ்வாக இராவணேஸ்வரன் கூத்தும் மேடையேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக வாழ்நாள் தமிழ் பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும், சங்கானை கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு. சூசைப்பிள்ளை நோபேட் உதயகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரீபன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டதுடன் திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குனர் திரு ஜோன்சன் ராஜ்குமார் அவர்கள் கலந்து கலைக்கதிர் இதழுக்கான நயப்புரையை வழங்கியிருந்தார்.

By admin