யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவும், தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றியம் இணைந்து முன்னெடுத்த தீவக மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானமும் ஓன்றுகூடலும் கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.

தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை றெக்னோ அவர்களின் வழிகாட்டலில் மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்கள் கலந்து தியான உரை, செபமாலை, சிலுவைப்பாதை தியானம், குழு செயற்பாடு என்பவற்றின் ஊடாக இளையோரை நெறிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் மறைக்கோட்ட புதிய நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றதுடன் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் மற்றும் நிர்வாகக்குழு அங்கத்தவர்களும் பங்குபற்றியிருந்தனர்.

தொடர்ந்து அன்று மாலை புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவினரால் புங்குடுதீவு பங்கு இளையோரையும் இணைத்து “சிலுவையோடு பயணம்” சிலுவைப்பாதை காட்சிப்படுத்தல் தியானமும் நடைபெற்றது.

By admin