யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால தியானம் 21ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், ஒப்புரவு அருளடையாளம், நற்கருணை வழிபாடு என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் 50 வரையான மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர்.