திருகோணமலை மறைமாவட்டம் சாம்பல்தீவு திருச்சிலுவை மலையில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த திருச்சிலுவை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை றொகான் பேணாட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள் கலந்து புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை போல் றொபின்சன், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், Aid to the Church in Need நிறுவன ஆசிய பிராந்திய தலைவர் பார்பறா றெற்ரிக், இறைமக்களென பலரும் கலந்துசெபித்தனர்.

By admin