மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தவக்கால தியானம் கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை கள்ளிக்கட்டைக்காடு உயிலங்கும் டிவைன் மெர்சி தியான இல்லத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானத்தில் அருட்தந்தை அகஸ்ரின் முண்டேகாட் அவர்கள் கலந்து தியான உரைகள், செபமாலை, திருச்செபமாலை தியானம், குணமாக்கல் வழிபாடு என்பவற்றின் ஊடாக இளையோரை வழிப்படுத்தினார்.
தியான நிறைவில் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் திருப்பலி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த இளையோரென 720ற்கும் அதிகமானவர்கள் பங்குபற்றினர்.

By admin