யாழ். மாகாண திருக்குடும்ப பொருளாளர் குழுவினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மகளிர் தின சிறப்பு நிகழ்வு கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை யாழ். திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது.
யாழ். மாகாண பொருளாளர் அருட்சகோதரி மறிஸ்ரெலா சூசைப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்புரைகள், குழு விளையாட்டுக்கள், குழு அமர்வுகள், உறவுப் பகிர்வுகள், மகிழ்வூட்டல் நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
அருட்சகோதரி மறிஸ்ரெலா சூசைப்பிள்ளை அவர்கள் மகளிர் தினம் பற்றியும் யாழ். திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குனர் திரு. ஜோன்சன் ராஜ்குமார் அவர்கள் பெண்களின் சிறப்புப் பற்றியும் மாகாண ஆலோசகர் அருட்சகோதரி புறோத்மேரி அருளானந்தம் அவர்கள் போதை விழிப்புணர்வு பற்றியும் சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் மாகாண ஆலோசகர் அருட்சகோதரி மெற்றில்டா வசந்தி, அருட்ககோதரிகள் உட்பட 150 வரையான மகளிரும் பங்குபற்றியிருந்தனர்.

By admin