கிளிநொச்சி மறைக்கோட்ட மரியாயின் சேனை கியூரியாவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்ட ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் செபமாலை தியானம், திருச்சிலுவைப்பாதை, ஒப்புரவு அருளடையாளம் என்பன இடம்பெற்றதுடன் யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக உறுப்பினர் திரு. ஞானமுத்து எசார்வே அவர்கள் கலந்து மரியாளின் ஆளுமைப் பண்புகள் என்னும் தலைப்பில் தியான உரையும் வழங்கினார்.
தியான நிறைவில் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்களின் தலைமையில் திருப்பலி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி, வட்டக்கச்சி, உருத்திரபுரம், அக்கராயன்குளம் பங்குகளை சேர்ந்த 65 மரியாயின் சேனை அங்கத்தவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin