கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல திருவிழாவில் பங்குபற்றுவதற்காக இந்நியாவிலிருந்து வருகைதந்த சிவகங்கை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை லூர்து ஆனந்தம் அவர்கள் இலங்கை நாட்டின் நான்கு தமிழ் மறைமாவட்டங்களையும் தரிசித்த நிலையில் யாழ். மறைமாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
13ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் கனடா நாட்டின் கமில்ரன் உயர் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை லோரன்ஸ் லொப்சிங்கர் அவர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் யாழ். மறைமாவட்டத்தை தரிசித்து மறைமாவட்ட ஆயர் அவர்களை கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடிள்ளார்.

By admin