பாசையூர் புனித அந்தோனியார் ஆலயம் அமைக்கப்பட்டதன் 175ஆம் ஆண்டு நிறைவின் நினைவாக அமைக்கப்படவுள்ள வரவேற்பு வளைவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 06ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆலய முன்வீதியில் அமையப்பெறவுள்ள இவ்வளைவிற்கான அடிக்கல்லை பங்குத்தந்தை அவர்கள் நாட்டிவைத்தார் இந்நிகழ்வில் ஏராளமான பங்குமக்கள் கலந்துகொண்டனர்.