இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக உறுப்பினர்களின் பங்கு களதரிசிப்பும் ஒன்றுகூடலும் கடந்த மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
கழக இயக்குநர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சில்லாலை பங்குத்தந்தை அருட்தந்தை லியோ அவர்களால் கூட்டொருங்கிய பயணத்தில் பொதுநிலையினரின் கடமைகளும், பொறுப்புக்களும் என்னும் தலைப்பில் கருத்துரையும் தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் 60 வரையான பொதுநிலையினர் கழக உறுப்பினர்களின் பங்குபற்றியிருந்தனர்.