மெலிஞ்சிமுனை நரையாம்பிட்டி புனித அந்தோனியார் யாத்திரைத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 08ஆம் திகதி இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
07ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி தொடர்ந்து நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி அதிபர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்தவக் கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை டினேசன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்கள்.