இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியின் Young Henrician விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் வடமாகாண உதைப்பந்தாட்ட கழக அணிகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கனேடியன் ஹென்றீசியன் கிண்ணத்தொடரின் இறுதி போட்டி கடந்த 03ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ் இறுதி போட்டியில் குருநகர் பாடும் மீன்; மற்றும் மயிலங்காடு ஞானமுருகன் அணியினர் போட்டியிட்டு குருநகர் பாடும் மீன் அணியினர் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றினர்.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் மற்றும் யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான பிரிவின் சிரேஸ்ட விரிவுரையாளர் திரு. சாபநந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார், குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ், பிரான்ஸ் பழைய மாணவர் சங்க தலைவர் திரு. ஜொசி ஜெயந்திரன், கனடா பழைய மாணவர் சங்க தலைவரும் இத்தொடரின் அனுசரணையாளருமான திரு. பிறின்ஸ் கௌட்றி, வலிகாம உதைப்பந்தாட்ட லீக் தலைவர் திரு. யுகராஜ், இளவாலை பொலிஸ் நிலைய தலைமை காவல் ஆய்வாளர் திரு. ஜெயானந்த் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

அத்துடன் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியும் திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலயமும் இணைந்து முன்னெடுத்த வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி கடந்த மாதம் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

பாடசாலைகளின் அதிபர்கள் அருட்தந்தை மைக் மயூரன் மற்றும் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாசன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அநுராதபுரம் கஹடகஸ்திகிலிய பிரதேச செயலாளர் திரு. இரட்ணேஸ்வரன் செந்தில் அவர்கள் பிரதம விருந்தினராகவும் வைத்தியரும் திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலய பழைய மாணவியுமான வைத்தியர் திருமதி. சிவஞானம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலய முன்னைநாள் அதிபர் அருட்சகோதரி மேரி பாபறா குருஸ், ஹென்றியரசர் கல்லூரியின் கனடா நாட்டு பழைய மாணவர் சங்க தலைவர் திரு. பிறின்ஸ் கௌட்றி, பிரான்ஸ் நாட்டு பழைய மாணவர் சங்க தலைவர் திரு. ஜொசி ஜெயந்திரன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.

By admin