திருத்தந்தையின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டு வருவதாகவும், பழைய நிலைக்கு திரும்ப இன்னும் சில நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டுமெனவும் மருத்துவர்களின் கூற்றை மேற்கோள்காட்டி திருப்பீடத் தகவல் தொடர்புத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இவ்வறிக்கையில், மூச்சுக்குழல் அழற்சி நோய் காரணமாக அவருக்கு வழங்கப்பட்டுவந்த செயற்கை சுவாசம் கொடுக்கும் சிகிச்சைமுறை தற்போது தொடர்ந்து வழங்கப்படவேண்டிய தேவை இல்லையெனவும், அவ்வப்போது மட்டுமே வழங்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை காலை மூச்சு பயிற்சியை சிறு ஓய்வுகளுக்கிடையில் மேற்கொண்ட திருத்தந்தை அவர்கள், மாலையில் உடலியக்க பயிற்சிக்குப்பின் ஜெமெல்லி மருத்துவமனையின் 10வது மாடியில் உள்ள சிற்றாலயத்திற்கு சென்று செபித்து திவ்விய நற்கருணையைப் பெற்றுக்கொண்டதாகவும், சிறிய அளவில் தன் அலுவலக பணிகளை அன்றையதினம் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ள திருப்பீட தகவல் தொடர்புத்துறை, ஆபத்தான நிலையைக் கடந்துவிட்ட திருத்தந்தை அவர்கள் உடலளவில் சிறிது சோர்வாக இருந்தாலும், மனதளவில் மிகவும் உற்சாகமாக இருந்ததைக் காணமுடிந்ததெனவும் குறிப்பிட்டுள்ளது.

By admin