யாழ். புனித மரியன்னை பேராலய இளைஞர் உருவாக்கல் இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 23ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித மரியன்னை பேராலய ஆயர் யஸ்ரின் மண்டபத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் வழிநடத்தலில் உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை கமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 42 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.