இவ்வருடம் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக யாழ். மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கத்தோலிக்க மற்றும் கணிதபாட வழிகாட்டல் செயலமர்வுகள் கடந்த 15, 16 ஆம் திகதிகளில் நடைபெற்றன.
மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தின் உதவியுடன் மறைக்கோட்ட ரீதியாக நடைபெற்ற இக்கருத்தமர்வுகள் யாழ்ப்பாணம் சென். ஜேம்ஸ் மகளிர் பாடசாலை, யாழ்ப்பாணம் புனித மரியாள் வித்தியாலயம், அல்லைப்பிட்டி மொண்பேர்ட் சர்வதேச பாடசாலை, பருத்தித்துறை புனித தோமையார் றோ.க பெண்கள் பாடசாலை, முல்லைத்தீவு மகா வித்தியாலயம், கிளிநொச்சி கனிஸ்ர மகாவித்தியாலயம், முழங்காவில் மகா வித்தியாலயம், இரணைதீவு மகா வித்தியாலயம் ஆகிய இடங்களில் நடைபெற்றன.
இக்கருத்தமர்வுகளில் 500ற்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.