உரோம் நகர் ஜெமெல்லி மருத்துவமனையில் நுரையீரல் அழற்சி நோய்க்காக சிகிச்சை பெற்றுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாக திருப்பீட சமூகத் தொடர்புத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21ம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் காலை உடல்நல முன்னேற்றத்துடன் படுக்கையில் இருந்து எழுந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காலை உணவின் பின் தன் அலுவலக வேலைகளை சிறிய அளவில் மருத்துவமனையில் தொடங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.