குருநகர் மற்றும் புனித அடைக்கல அன்னை ஆலய மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென். ஜேம்ஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
யாழ். மறைக்கோட்ட மறையாசிரிய இணைப்பாளர் அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மறையாசிரியர்களுக்கான ஒன்றுகூடலும் பாட ஆயத்தம் தொடர்பான கருத்துரையும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் 25 வரையான மறையாசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.