மன்னார் மறைமாவட்ட பங்குகளில் பணியாற்றும் திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்களுக்கான முதலாவது பயிற்சி பாசறை கடந்த 14ஆம் திகதி ஆரம்பமாகி 16ஆம் திகதி வரை மடுத்தியான இல்லத்தில் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட பாப்பிறையின் சபைகளின் இயக்குநர் அருட்தந்தை தயாளன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மறைமாவட்ட சமூகதொடர்பு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை சேவியர் ரஜீவன் மற்றும் திரு. அலெக்ஸ் நிக்சன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து ஊக்குவிப்பாளர்களை நெறிப்படுத்தினர்.
இப்hசறையின் ஆரம்ப நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களும், இறுதிநாள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்டத்தின் 24 பங்குகளில் பணியாற்றும் 74 திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.