இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் சம்மேளனத்தின் 2025/26 ஆம் ஆண்டின் புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கான பயிற்சி பட்டறை கடந்த 15, 16 ஆம் திகதிகளில் கொழும்பு உயர் மறைமாவட்ட உதம்மிட புனித ஜோசப் இளையோர் நிலையத்தில் நடைபெற்றது.
சம்மேளன இயக்குநர் அருட்தந்தை ஹெலன பீரீஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைமைத்துவ பயிற்சிகள், யூபிலி ஆண்டு தொடர்பான செயலமர்வுகள், திருப்பலி, வழிபாடுகள் என்பவை இடம்பெற்றன.
இந்நிகழ்வில் 12 மறைமாவட்டங்களைச் சேர்ந்த 18 உறுப்பினர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.