குறுந்திரைப்பட உருவாக்கத்தில் ஆர்வமுள்ளோரின் திறன்களை வெளிக்கொணரும் நோக்கில் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் குறுந்திரைப்படப் போட்டி நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
‘எதிர்பார்ப்பின் மனிதர்கள்” என்னும் தலைப்பில் நடைபெறவுள்ள இப்போட்டியில் பங்குபற்ற விரும்புவோர் குழுவின் பெயர், முகவரி, இரண்டு தொலைபேசி இலக்கங்கள் மற்றும் ஒரு Whatsapp இலக்கம் உள்ளடங்லாக விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து பங்குத்தந்தை, பாடசாலை அதிபர் அல்லது நிறுவன தலைவரின் சிபாரிசுடன் பணிப்பாளர், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம், 3வது மாடி, இலக்கம்: 180, ரீ.பீ. ஜயா மாவத்தை, கொழும்பு – 10 என்ற முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ வருகின்ற பங்குனி மாதம் 03ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்க வேண்டுமென கேட்கப்பட்டுள்ளனர்.
18 வயதுக்குக் குறைந்தவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டவர்களென 2 பிரிவுகளாக நடைபெறவுள்ள இப்போட்டியில் கத்தோலிக்கர்கள் மட்டுமே பங்குபற்ற முடியமெனவும் போட்டியாளர்கள் ‘எதிர்பார்ப்பின் மனிதர்கள்” என்னும் தலைப்பில் 3-5 நிமிடங்கள் உள்ளடங்கலாக புகைப்பட கருவி அல்லது கையடக்க தொலைபேசி மூலம் குறும்படத்தை வீடியோ பதிவுசெய்து Full HD தரத்தில் சித்திரை மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் ஒரு குழுவில் பங்குபற்றக்கூடிய அதிகபட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை பின்னர் அறிவிக்கப்படுமெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.