யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஓர் அங்கமான வைத்தியர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இலவச மருத்துவ முகாம் கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் நடைபெற்றது.

பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் வழிநடத்தலில் கழக தலைவர் வைத்தியர் திரு. தனேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் 15ற்கு மேற்பட்ட மருத்துவர்களுடன் தாதியர்கள் தாதிய மாணவர்கள் அறுபது பேர் கலந்து மக்களுக்கான மருத்துவ சேவைகளை வழங்கினர்.

குமுழமுனைப் பங்குத்தந்தை அருட்தந்தை அலின் கருணாகரன் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இம்முகாமில் 370 வரையான நோயாளர்கள் கலந்து சிகிச்சைபெற்றனர்.

By admin