யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தால் முன்னெடுக்கப்படும் மறையாசிரியர்களுக்கான ஒரு மாதகால வதிவிடப்பயிற்சி கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி மறைக்கல்வி நிலையத்தில் நடைபெற்றுவருகின்றது.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் வழிகாட்டலில் மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றுவரும் இவ்வதிவிட பயிற்சியில் யாழ். மறைமாவட்டத்தின் ஆறு மறைக்கோட்டங்களையும் சேர்ந்த 24 மறையாசிரியர்கள் பங்குபற்றியுள்ளனர்.