திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரி மேரி ஜோன் சேவியர் அவர்களின் துறவற வார்த்தைப்பாட்டின் 50ஆம் ஆண்டு மற்றும் அருட்சகோதரிகள் சித்ரா மனுவல்பிள்ளை, கொன்ஸ்ரன்ரைன் ஆகியோரின் 25ஆம் ஆண்டு யூபிலி நிகழ்வுகள் 15ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்றன.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில் நன்றி திருப்பலியும் தொடர்ந்து கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரிகளின் உறவினர்களென பலரும் கலந்து செபித்தனர்.