அச்சுவேலியில் அமைந்துள்ள அப்போஸ்தலிக்க கார்மேல் சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்படும் அப்போஸ்தலிக்க கார்மேல் கல்லூரியில் புதிய கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கணினி, ஆங்கிலம், சிங்களம், மனைப்பொருளியல், தையல், ஆரி வேர்க், பெண்கள் அலங்காரம் மற்றும் கேக் ஜசிங் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய இக்கற்கை நெறிகளுக்கு கா.பொ.த உயர்தரத்தை பூர்த்திசெய்த யுவதிகள் விண்ணப்பிக்க முடியுமெனவும் இக்கற்கைநெறி இம்மாதம் 17ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி 5 மாதகாலம் நடைபெறவுள்ளதடன் விடுதி தேவைப்படும் மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்படுமெனவும் கல்வியக இணைப்பாளர் அருட்சகோதரி திரேஸ்ராணி அவர்கள் தெரிவித்துள்ளார்.