இலங்கையில் அடக்குமுறைகள் அகற்றப்பட்டு மக்கள் அனைவரும் சமாதானத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கடந்த 1ஆம் திகதி சனிக்கிழமை கலகெடிகன நிட்டம்புவ புனித துன்ப முடிச்சுகளை அவிழ்க்கம் அன்ன ஆலய திறப்பு விழாவில் கலந்துகொண்ட கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் மல்கம் கருதினால் ரஞ்சித் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டு போரில் லட்சக்கணக்கான மக்கள் இறந்ததாகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காயப்பட்டதாகவும் பத்து அருட்ப பணியாளர்கள் கொல்லப்பட்டதாகவும் ஐ.நா அறிக்கைகள் தெரிவித்துள்ள நிலையில் இலங்கையின் அரசியல்வாதிகள் மக்களை அடக்குவதை விடுத்து இரக்கம் நல்லிணக்கம் மனிதநேயம் அன்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்குமாறு பேராயர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி அனுர குமாரவின் வடக்கிற்கான பயணத்தின் போது மக்களின் வரவேற்பையும் நல்லிணக்கத்திற்கான விருப்பத்தையும் அவர் கண்டதை சுட்டிக்காட்டி தற்போதைய அரசியல் தலைவர்களும் ஜனாதிபதியின் முன்மாதிரியை பின்பற்றி நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் எனவும் அழைப்புவிடுத்துள்ளார்.

By admin