பருத்தித்துறை தும்பளை புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தநாள் வழிபாடுகள் கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன.
தினமும் 4:30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆயத்தநாள் வழிபாடுகள் இடம்பெற்றுவருவதுடன் 10ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 05 மணிக்கு நற்கருணைவிழா திருப்பலியும் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 07 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.