கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ நிறுவனத்தில் முன்னெடுக்கப்பட்ட டொன் பொஸ்கோ திருவிழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 31ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிறுவன இயக்குனர் அருட்தந்தை மெல்வின் றோய் மற்றும் டொன் பொஸ்கோ தொழிற்பயிற்சி நிலைய அதிபர் அருட்தந்தை கஜான் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து திருவிழா திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருப்பலியை தொடர்ந்து கல்வியகத்தில் கணினி, ஆங்கிலம், கேக் ஜசிங் மற்றும் ஆரி வேர்க் கற்கைநெறிகளை பூர்த்திசெய்த மாணவர்கள் மற்றும் டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையில் 2024ஆம் கல்வியாண்டில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

Mosvold Martinus Foundation நிறுவன நிறுவுனர் திரு. நிமால் மாற்றினஸ் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற், ஒமேகா லைன் நிறுவன தலைவர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் ஒமேக்கா லைன் பணியாளர்கள், பூநகரி பிரதேச செயலகர், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மாணவர்கள், பழைய மாணவர்கள், அயற் பாடசாலை அதிபர்கள், பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin