தவக்காலத்தை முன்னிட்டு தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் இவ்வருடமும் தவக்கால யாத்திரை தியானங்களை நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மறைக்கோட்ட ரீதியாக நடைபெறவுள்ள இத்தியானங்களில் பங்குனி மாதம் 08ஆம் திகதி யாழ்ப்பாண மறைக்கோட்டத்திற்கும் பங்குனி மாதம் 15ஆம் திகதி தீவக மறைக்கோட்டத்திற்கும் பங்குனி மாதம் 22ஆம் திகதி முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மறைக்கோட்டங்களிற்கும் பங்குனி மாதம் 29ஆம் திகதி இளவாலை மறைக்கோட்டத்திற்கும் சித்திரை மாதம் 05ஆம் திகதி பருத்தித்துறை மறைக்கோட்டத்திற்கும் பிரத்தியேகமான நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் சித்திரை மாதம் 12ஆம் திகதி பொது வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இத்தியானத்தில் பங்குபற்றுபவர்களுக்கான உணவும் தங்குமிட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதெனவும் மேலும் அவர் கூறியுள்ளார்.

By admin