போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன கல்வி உதவித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இவ்வருடம் கா.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கணிதபாட செயலமர்வு கடந்த மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் நடைபெற்றது.
நிறுவன இயக்குனர் அருட்தந்தை யூஜின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் உதவியுடன் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி கணித பாட ஆசிரியர்கள் திரு நந்திவர்மன் மற்றும் திரு. கஜீபன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து மாணவர்களை நெறிப்படுத்தினார்கள்.
இக்கருத்தமர்வில் 135 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.
இந்நிகழ்வுக்கான நிதி அனுசரணையை இலங்கை கரித்தாஸ் செடெக் நிறுவனத்தினூடாக கரித்தாஸ் கொரியா நிறுவனம் வழங்கியிருந்தது