யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தால் முன்னெடுக்கப்ட்ட கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி நான்காம் வருட இறையியல் மாணவர்களுக்கான சமூகப் பணிகளின் கள அனுபவ பயிற்சி கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெற்றது.
நிறுவன இயக்குனர் அருட்தந்தை இயூஜின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திரு. சண்முகலிங்கன், அரசறிவியல் துறைத் தலைவர் திரு. கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் திரு. நிலாந்தன், உளநல மருத்துவர் திரு. சிவதாஸ், எழுத்தாளர் திரு. யோசப்பாலா, விலங்கியல்துறை பேராசிரியர் ராஜேந்திரமணி, மகளிர் அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் உதயணி மற்றும் கீயூடெக் பணியாளர்கள் வளவாளர்களாக கலந்து கருத்துரைகள், அனுபவ பகிர்வுகள், களத்தரிவிப்புக்கள் ஊடாக அருட்சகோதரர்களை நெறிப்படுத்தியிருந்தனர்.