தீவக மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் 08ஆம் திகதி சனிக்கிழமை இன்று சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.
கழக இயக்குநர் அருட்தந்தை யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் திரு. ஜெகின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் யூபிலி ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மறைக்கோட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மறைக்கோட்ட பங்கு பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர்.