இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சி நாள் கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது.
இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செல்வரட்ணம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து “நிலைபேறான அமைதி மற்றும் சுபீட்சத்தை நோக்கி” என்னும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகவும், யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ், இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார், யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக தலைவர் திரு. ஜெகின் ஆகியோர் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் இளவாலை மறைக்கோட்ட பங்குத்தந்தையர்கள், மறைக்கோட்ட கழக உறுப்பினர்களென பலரும் கலந்துகொண்டனர்.