மாதகல் சென். ஜோசப் மகாவித்தியாலய ஆசிரியரான இயேசு மரியின் அன்பின் சகோதரிகள் சபை அருட்சகோதரி யோகராணி அவர்களின் கத்தோலிக்க திருமறை வினா-விடை நூல் வெளியீட்டு நிகழ்வு 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மாதகல் சென். ஜோசப் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் திரு. புஸ்பறங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நூலை வெளியிட்டுவைக்க நூலுக்கான ஆய்வுரையை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி ஆசிரியர் திரு. அனுஸ்ரதாஸ் அவர்கள் வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் மாதகல் பங்குத்தந்தை அருட்தந்தை றோய் பேடினென்ட், இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி உப அதிபர் அருட்தந்தை செறில்னஸ் சுமன், சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி அதிகாரி திரு. நொபேர்ட் உதயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் ஓய்வுநிலை கிறிஸ்தவ பாட கல்வி ஆலோசகர் திருமதி. ஜெலஸ்ரினா றிச்சர்ட் றேய்மன்ட் மாதகல் சென். தோமஸ் முன்பள்ளி பொறுப்பாளர் அருட்சகோதரி மேரி றோஸ் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.