யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான செயற்பட்டு மகிழ்வோம் திறன் விருத்தி செயலமர்வு 26ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்கள் மற்றும் இளையோரின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள், விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் 90 வரையான மறைக்கல்வி மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.