மானிப்பாய் புனித அன்னாள் ஆலய அருநோதய பாலர் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட கலைவிழா 29ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
பாடசாலை காப்பாளர் அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் வழிநடத்தலில் பாடசாலை பொறுப்பாசிரியர் திருமதி கனிஸ்ரா சுபாநந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறார்களின் கலைநிகழ்வுகளும் தரம் 01ற்கு செல்லும் சிறார்;களுக்கான கௌரவிப்பும் புதிய சிறார்களின் வரவேற்பும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மானிப்பாய் புனித அன்னாள் றோ.க.த.க. பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டனர்.