குமுழமுனை பங்கு நாச்சிக்குடா புனித யாகப்பர் ஆலய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து தலைமைதாங்கி திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

150 வருடங்கள் பழமை வாய்ந்த முருகைக்கல்லால் அமைக்கப்பட்டிருந்த இவ்வாலயம் கடந்த காலங்களில் நிலவிய இயற்கை அனர்த்தங்கள் மற்றும் யுத்தத்தால் சிதைவடைந்திருந்தது.

இந்நிலையில் இவ்வாலயத்தை பாதுகாக்கும் நோக்கோடு தற்போதைய பங்குத்தந்தையால் 2022ஆம் ஆண்டு புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு அதன் பணிகள் நிறைவடைந்து தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin