உலக தொடர்பாடல் யூபிலி தினத்தை முன்னிட்டு திருகோணமலை மறைமாவட்டதில் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கருத்தமர்வு 24ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை மறைமாவட்ட யூபிலி மண்டபத்தில் நடைபெற்றது.

மறைமாவட்ட தொடர்பாடல் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “தொடர்பாடல் வழியாக எதிர்நோக்கை உருவாக்குவோம்” என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இக்கருத்தமர்வை அருட்தந்தை எமர்சன் ராகல் திரு. சந்திரன், திரு. சஞ்ஜீவன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து நெறிப்படுத்தியிருந்தார்கள்.

இக்கருத்தமர்வில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் 130 வரையான மாணவர்கள் இக்கருத்தமர்வில் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin